குஜராத்துடன் 4 போட்டிகள்.. நான்கிலும் அரைசதமடித்த ருத்ராஜ்..! ஆச்சரியமான சாதனை..!
நேற்றைய போட்டியுடன் சேர்ந்து குஜராத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் தொடரில் மோதியுள்ள நிலையில் 4 போட்டிகளிலும் ருத்ராஜ் அரை சதம் அடித்த ஆச்சரியமான சாதனை குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
நேற்றைய போட்டியில் குஜராத் அணீக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது என்பது குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் அரை சதம் அடித்து அசத்தினார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இதற்கு முன்பு மூன்று முறை குஜராத் மற்றும் சென்னை அணிகள் இடையில் ஆன போட்டி நடைபெற்ற நிலையில் அந்த மூன்று போட்டிகளிலும் ருத்ராஜ் அரை சதம் அடித்துள்ளார் கடந்த 2022 ஆம் ஆண்டு புனே மற்றும் மும்பை மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும், இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டியிலும் குஜராத் அணியுடன் சிஎஸ்கே மோதிய நிலையில் அந்த மூன்று போட்டிகளிலும் ருத்ராஜ் அரைசதம் அடித்தார். ஆனால் இந்த மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் நேற்று நான்காவது முறையாக குஜராத் அணியுடன் சிஎஸ்கே மோதிய நிலையில் நேற்றைய போட்டியிலும் ருத்ராஜ் அரைசதம் அடித்தார் என்றும் ஆனால் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva