திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 மே 2023 (12:21 IST)

அமுல் நிறுவன வரவால் பாதிப்பா?ஆவின் நிறுவனம் விளக்கம்

குஜராத்தை சேர்ந்த  அமுல் நிறுவனம் தமிழகத்தில் கால் பதிக்கும் நிலையில் இதுபற்றி ஆவின் பால் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
 

தமிழகத்தில் பால் பொருட்கள் விற்பனையில் அரசின் அவின் பால் நிறுவனம் முன்னணியில் உள்ளது.  இதுதவிர தனியார் துறையைச் சேர்ந்த பால் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில்,  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனம்   வெளிமாநிலங்களிலும் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆவின்  கொடுப்பதைவிட லிட்டருக்கு ரூ.2 அதிகம் கொடுப்பதாகக் கூறி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளது அமுல் நிறுவனம்.
 

அமுல் நிறுவனத்தில் வரவால் ஆவின் பால் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில்,  தனியார் நிறுவனங்களைப் போல் அமுல் நிறுவனமும் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்துகொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டில் பால் கூட்டுறவு சங்கங்களை அமைக்க முடியாது என்று ஆவின் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.