140 ரன்கள் இலக்கை அடைய திணறி வரும் சென்னை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் பிளே ஆஃப் சுற்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதி வருகின்றன
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய ஐதராபாத் பேட்டிங் செய்தது. இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 43 ரன்களும், வில்லியம்சன், யூசுப்பதான் தலா 24 ரன்கள் எடுத்தனர்.
இந்த நிலையில் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது. ஆனால் ஐதராபாத் அணியின் அபார பந்துவீச்சால் சென்னை அணி 24 ரன்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகின்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணி எது? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்