மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் பட்டியலில் ஒரு இந்திய கிரிக்கெட்டர்!
ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து சிறந்த வீரர் விருது வழங்கி வருகிறது.
சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய முன்னெடுப்பாக இனிமேல் விருதுகளை மாதம் தோறும் வழங்க உள்ளது. இதற்கான வீரர்கள் பரிந்துரையை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த விருதுகள் மாதம்தோறும் முதல் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் ஆகியோர் அந்த விருதை பெற்றனர். இந்நிலையில் இந்த மாதம் புவனேஷ்வர் குமாரின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.