செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:16 IST)

இந்திய பயணிகளுக்கு இங்கிலாந்து அரசு தடா!

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தற்காலிக தடை விதித்திருக்கிறது என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,29,28,574 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 685 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,66,862 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,18,51,393 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,10,319 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருவதால் நியூஸிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் அறிவித்துள்ளது.