செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (22:28 IST)

திருமண தேதி அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார். 


 
 
27 வயதான புவனேஷ்வர் குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். 
 
இதுவரை 18 டி20 (17 விக்கெட்), 75 ஒருநாள் (80 விக்கெட்), 18 டெஸ்ட் (45 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
 
இவருக்கும் நுபுர் நாகருக்கும் கிரேட்டர் நொய்டாவில் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், தற்போது இவர்களது திருமண தேதி வெளியாகியுள்ளது. 
 
இலங்கை அணிக்கு எதிரான தொடரின் மத்தியில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஆதாவது வரும் 23 ஆம் தேதி மீரட்டில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்கவுள்ளனர்.