1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (19:36 IST)

கடைசி டி20 போட்டி நடக்குமா?? மழையால் தாமதம்...

இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றவது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதானத்தில் நடைபெற இருந்தது.

 

 
 
டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2 வது ஆட்டத்தில் நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
எனவே, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், மழை காரணமாக இப்போட்டி தாமதமாக தொடங்கவுள்ளது. 
 
திருவனந்தபுரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி 29 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் நடைபெற உள்ளது. மேலும், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால் இப்போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளது. 
 
ஒருவேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் தொடர் 1-1 என சமனில் முடிவடையும் என தெரிகிறது.