இந்தியா பாகிஸ்தான் போட்டி; ஐசிசி அதிகாரயின்மையா? இயலாமையா? வாசிம் அக்ரம் சாடல்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 11 நவம்பர் 2017 (15:53 IST)
இந்தியா பாகிஸ்தான் மத்தியில் போச்சியை நடத்த ஐசிசி-க்கு அதிகாரம் உள்ளாதா இல்லை இயலாமையால் போட்டி நடத்தாமல் உள்ளதா என வாசிம் அக்ரம் சாடியுள்ளார். 

 
 
இதன்படி 2015 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இரு அணிகள் இடையே 6 இருதரப்பு தொடர்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், சில அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது.
 
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஆஷஸ் தொடரை விட மிக சுவாரசியமானது. ஆஷஸ் தொடரை 20 மில்லியன் கணக்கில் மக்கள் பார்த்தால், இந்தியா பாகிஸ்தான் போட்டியை பில்லியன் கணக்கில் பார்வையிடுவர். 
 
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட முடியாதது துரதிருஷ்டவசமானது. இரு அணிகள் இடையே போட்டியை நடத்த முடியாதது ஐசிசி-யின் இயலாமையா? அல்லது அதிகாரயின்மையா? என வாசிம் அக்ரம் கேட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :