செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (16:40 IST)

டி20 போட்டியில் ரன் கொடுக்காமல் 10 விக்கெட் வீழ்த்திய இளம் வீரர்!!

ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ரன் ஏதும் கொடுக்காமல் 10 விக்கெட்களை வீழ்த்திய இளம் இந்திய வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 


 
 
ஜெய்ப்பூரில் பாவர் சிங் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தனது தாத்தாவின் நினைவாக உள்ளூர் மைதானத்தின் உரிமையாளர்  இதை நடத்தினார். 
 
இந்த போட்டியில் திஷா கிரிக்கெட் அகாடமி மற்றும் பியர்ல் அகாடமி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திஷா கிரிக்கெட் அகாடமி அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் எடுத்தது. 
 
எளிய வெற்றி இலக்குடன் களமிரங்கிய பியர்ல் அகாடமி அணி 36 ரன்களில் சுருண்டது. இதற்கு காரணம் திஷா அணியின் வீரரான ஆகாஸ் சவுத்ரி.
 
ஆகாஸ் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். மூன்று ஓவரில் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.