திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (12:08 IST)

காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம்! – தமிழக வீராங்கனை சாதனை!

Bhavani Devi
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த சில நாட்கள் முன்னதாக தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளன. இந்த போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று தரவரிசையில் இந்தியா 4வது இடத்தை பிடித்தது.

இந்த போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த பவானி தேவி ஆஸ்திரேலிய வீராங்கனையான வஸ்லாவை எதிர்கொண்டார்.

இதில் ஆஸ்திரேலிய வீராங்கனையை பவானிதேவி 15-10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.