திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (17:39 IST)

நகைக்கடை திறந்த இரண்டே நாட்களை கடையை காலி செய்த திருடர்கள்: கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

jewellery
கள்ளக்குறிச்சி அருகே நகை கடை திறந்த இரண்டே நாட்களில் அந்த கடையில் இருந்த அனைத்து நகைகளையும் திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கள்ளகுறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புத்தூர் என்ற கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நகைக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இந்த நகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அந்த கடையில் இருந்த 281 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் 
 
மேலும் அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்த வயர்களையும் துண்டித்து உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
நகைக்கடை திறந்த இரண்டே நாட்களில் அந்த கடை முழுவதிலும் உள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.