செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (09:29 IST)

மழை நின்றது; போட்டி தொடங்கியது – ஆஸி தடுமாற்றம்.. புவி அசத்தல்…

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மெல்போர்னில் மழையால் நிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டி 20 தொடர் டிராவிலும், டெஸ்ட் தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளன. அதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடந்து முடிந்த 2 ஆட்டங்களில் இந்தியா ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதனால் இன்று நடக்கும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவாப் போட்டியாக இருக்கும். தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் கோஹ்லி முதலில் பந்து வீச முடிவெடுத்தார். இந்திய அணியில் அதிரடி மாற்றமாக அம்பாத்தி ராயுடு மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு கேதார் ஜாதவ், விஜய் சங்கர் மற்றும் சஹால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன் மற்றும் பெஹ்ரண்டோர்ஃப் நீக்கப்பட்டு ஆடம் ஸாம்பா மற்றும் பில்லி ஸ்டேன்லேக் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போட்டித் தொடங்கி இரண்டு பந்துகளே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆஸி 2 பந்துகளில் 1 ரன் சேர்த்துள்ளது. சிறிது நேரம் மழையால் போட்டி பாதிக்கப்பட்ட நிலையில் மழை விட்டபின் மீண்டும் போட்டி தொடங்கியது. அதன் பின்னர் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸி மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் புவனேஷ்வர் குமார் தொடக்க ஆட்டக்காரர்களான கேரியை 5 ரன்களிலும் கேப்டன் பிஞ்ச்சை 14 ரன்களிலும் ஆட்டமிழக்க செய்தார்.

சற்று முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்து இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது. உஸ்மான் கவாஜா 15 ரன்களுடனும் ஷான் மார்ஷ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.