ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (14:29 IST)

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை

asian cup final
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. 
 
இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து 66 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில் இந்திய அணி கண்டிப்பாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran