கடந்த 10 ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்! – சாதனை படைத்த அஸ்வின்!
2019ஆம் ஆண்டு முடிந்து 2020ம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகம் சாதித்தவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது.
2020ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் 2019 ஆண்டில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் கிரிக்கெட் துறையில் பெரும் சாதனை நிகழ்த்தியவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வருட சாதனையை மட்டுமல்லாமல் கடந்த 10 வருடத்தில் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.
சர்வதேச போட்டிகளில் 2011 முதல் இவர் வீழ்த்திய விக்கெட்டுகள் மொத்தம் 564. அவரது இந்த சாதனையை பாராட்டி ஐசிசி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தொடர்ந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் 535 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், ஸ்டூவர் ப்ராட் 525 விக்கட்டுகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.