விராத் கோஹ்லி அபார பேட்டிங்: தொடரை வென்றது இந்தியா!

Last Modified ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (21:50 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று உள்ள நிலையில் இன்று கட்டாக்கில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது
இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 316 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 316 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தத் தொடரை இந்தியா வென்றுள்ளது

ஸ்கோர் விபரம்

மே.இ.தீவுகள் அணி: 315/5
50 ஓவர்கள்

பூரன்: 89
பொல்லார்டு: 74
ஹோப்: 42
ஹெட்மயர்: 37

இந்தியா: 316/6 48.4 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 85
கே.எல்.ராகுல்: 77
ரோஹித் சர்மா: 63
ஜடேஜா: 39இதில் மேலும் படிக்கவும் :