கவுண்ட்டி போட்டியில் சொதப்பி வரும் அஷ்வின்!
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி போட்டிக்காக விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இப்போது விளையாடி வருகிறார். இதற்காக அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதற்கு முன்னதாக இங்கிலாந்தின் கவுண்ட்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 43 ஓவர்கள் பந்துவீசியும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.