1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (10:08 IST)

தனுஷ் படத்தை இயக்கும் வெற்றிப்பட இளம் இயக்குனர்!

தனுஷ் படத்தில் இருந்து பாலாஜி மோகன் வெளியேறியுள்ள நிலையில் இப்போது பியார் பிரேமா காதல் இயக்குனர் இளன் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

நடிகர் தனுஷுக்கு இருக்கும் ஆஸ்தான இயக்குனர்களில் பாலாஜி மோகனும் ஒருவர். ஆனால் அவர்கள் கூட்டணியில் உருவாகிய மாரி மற்றும் மாரி 2 ஆகிய இரண்டு படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படத்தில் இணைவது என்றும் அதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அந்த படம் மாரி 3 ஆக இருக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து பாலாஜி மோகன் விலகியுள்ளாராம். இதனால் அந்த படத்தை இயக்க இப்போது பியார் பிரேமா காதல் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் இளன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.