வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (10:28 IST)

கமல்ஹாசனை பார்த்து நீங்கள்தான் சிறந்த காமெடியன் என்று சொன்ன இயக்குனர்

லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா தனக்கு மிகவும் பிடித்த காமெடியன் என்றால் அது கமல்ஹாசன்தான் என கூறியுள்ளார்.

லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி பகடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் ராம்பாலா. இவரின் அறிமுகம்தான் சந்தானம், ஜீவா மற்றும் யோகி பாபு போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் எல்லாம். சினிமாவிலும் இவர் இயக்கிய தில்லுக்கு துட்டு மற்றும் இடியட் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘நான் ஒருமுறை கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘எனக்கு மிகவும் பிடித்த காமெடியன் நீங்கள்தான் எனக் கூறினேன். அதை கேட்ட மற்றவர்கள் ஷாக் ஆக, கமலோ அவர் சொல்வது சரிதான். காமெடி செய்வதுதான் மிகவும் கஷ்டம் எனக் கூறினார்.’ எனக் கூறியுள்ளார்.