வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (10:24 IST)

ஆண்டில் 300 நாட்கள் தூங்கும் வினோத மனிதர்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பழக்கடை உரிமையாளர் அதீத தூக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்த 42 வயது புர்காராம் என்பவர் பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் இதெல்லாம் வருடத்தில் 65 நாட்களுக்கு மட்டும்தான். மீதமுள்ள 300 நாட்களில் புர்காராம் தூங்கியபடியேதான் இருப்பாராம். இப்படியே சுமார் 23 ஆண்டுகளாக அவர் தூங்கிக்கொண்டே இருந்துள்ளாராம். சாப்பிடுவது கூட தூக்கத்தில்தானாம்.

இது சம்மந்தமாக மருத்துவர்கள் நடத்திய சோதனையில் ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா என்ற நோய்தான் காரணம் என்று சொல்லியுள்ளார்களாம். இந்த வகையான நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என சொல்லப்படுகிறது.