புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2020 (21:27 IST)

விராட் கோலிக்கு போட்டியான மனைவி அனுஷ்கா சர்மா !

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் பிரபல கிரிக்கெட் வீரர் கோலியின் மனைவி ஆவார். தற்போது அனுஷ்கா சர்மா ஒரு பயோபிக் படத்தில் நடித்து வருகிறார்.
அதாவது, முன்னாள் மகளிர் இந்திய கிரிக்கெட் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 
 
தற்போது இந்தப் படத்திற்கான சூட்டிங்கில் அனுஷ்கா ஜெர்ஸி அணிந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 
இதற்கு நெட்டிசன்ஸ்,  விராட் கோலிக்கு போட்டியாக அனுஷ்கா சர்வா சிறப்பாக விளையாடுகிறார் என பதிவிட்டு வருகின்றனர்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் ஜூலன் கோஸ்வாமி அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.