திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (12:17 IST)

”தோனி அந்த விஷயத்தில் பலே கில்லாடி..” புகழும் ஆஸ்திரேலிய வீரர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆட்டத்தை கச்சிதமாக முடிப்பதில் கில்லாடி என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி புகழ்ந்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வருகிற 14 ஆம் தேதி  வாங்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் கிரிக்கெட் வீரர்கள்.

இந்நிலையில் பயிற்சியின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, “இந்திய வீரர் தோனி, நெறுக்கடியான போட்டிகளிலும் ஆட்டத்தை கச்சிதமாக முடிப்பதில் கில்லாடி. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். நானும் அவரை போல் சாதிக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.