புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (12:21 IST)

வீடு திரும்பிய கங்குலி... வீட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

 
சமீபத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
பிசிசிஐ தலைவர் கங்குலி உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணித்து வருவதாகவும் கொல்கத்தா தனியார் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்தனர். 
 
பின்னர் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.