வியாழன், 28 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (11:32 IST)

அப்ரிடி செய்த பித்தலாட்டம் – சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை !

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி தனது வயதைக் குறைத்து சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளது இப்போது வெளியாகியுள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட்டில் மிகக்குறைந்த வயதில் அறிமுகமாகி சாதனைப் படைத்தவர்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியும் ஒருவர். அவர் தனது முதல் சதத்தை 37 பந்துகளில் அடித்து சர்வதேச கிரிக்கெட் உலகை அதிரவைத்தார். அந்த சதத்தின் போது அவரது வயது 16 ஆண்டுகள் 217 நாட்கள் என சாதனைப் புத்தகத்தில் சொல்லப்பட்டது.

ஆனால் அப்போதே அவரது வயது குறித்த சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்தன. அதை இப்போது அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தின் மூலம் உண்மை என ஒப்புக்கொண்டுள்ளார். கேம் சேஞ்சர் என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தில் 37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது எனது வயது 19. நான் 1975 ஆம் ஆண்டு பிறந்தேன். ஆனால் அதிகாரிகள் தவறால் நான் 1980 ஆம் ஆண்டு பிறந்ததாக மாற்றப்பட்டு விட்டது.

ஆனால் அப்ரிடி சொல்வது போல பார்த்தாலும் அப்ரிடி சதம் அடித்த போது அவருக்கு 21 வயது ஆகும். அப்ரிடியின் இந்தவயது சர்ச்சை இப்போது பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.