ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (12:41 IST)

தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்கள்... பாகிஸ்தானை மிரட்டி விட்ட மோடி

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பாகிஸ்தானை மிரட்டியுள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்த போது பேசியது பின்வருமாறு, தீவிரவாதிகளின் மனதிலும், உள்ளத்திலும் மிகப்பெரிய அச்சத்தை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. 
 
நமக்கு தொந்தரவு செய்யும் தீவிரவாதிகளை அவர்களின் இடத்துக்கே சென்று தாக்கி அழித்திருக்கிறோம். ஆதலால், பாகிஸ்தானின் எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் இந்தியா இனிமேல் அஞ்சாது.
இந்தியாவை ஒருநேரத்தில் பாகிஸ்தான் அச்சுறுத்திவந்த காலம் இருந்தது. எங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது, அணு ஆயுத பட்டனை அழுத்தி தாக்கிவிடுவோம் என்று கூறியது, இதையே பல்வேறு அதிகாரிகளும் அரசிடம் கூறி வந்தார்கள்.
 
நான் கேட்கிறேன், நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது, நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம் என பேசினார். இது பாகிஸ்தானை அணு ஆயுதங்களை வைத்து மிரட்டும் விதமாக உள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.