1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (08:05 IST)

2வது டி20 போட்டியிலும் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்..!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கிரிக்கெட் சரித்திரத்திலேயே முதல் முறையாக டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் வென்று வரலாற்று சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 130  ரன்கள் எடுத்தது. 131 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி கடைசி ஓவரில் ஒரே ஒரு பந்து மீதம் இருக்கையில் அதாவது 19.5 வது ஓவரில் 133 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva