வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 25 மார்ச் 2023 (18:41 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா ஆப்கானிஸ்தான்?

Afghanistan
பாகிஸ்தான்  மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர்  ஐக்கிய அரபு அமீரகமான சார்ஜாவில்  நடந்து வருகிறது.

இத்தொடரின் முதல்போட்டி நேற்று  நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சதாப் கான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில், பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான பாபர், ரிஸ்வான், அப்ரிடி ஆகியோர் இல்லாத நிலையில், ஆரம்பம் முதலே திணறிய பாகிஸ்தான் அணியி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது.

.ஆப்கானிஸ்தான் தரப்பில், பாரூக்கி, முஜீப், முகமது நபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 93 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 17.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 போட்டியில்  தன் முதல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முகமது நபி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது, 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் தொடரை வெல்லுமா என்பது நாளை நடக்கும் 2 வது போட்டியில் தெரிந்துவிடும்!

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணியான பாகிஸ்தான் எப்படியும் ஜெயிக்கும் முனைப்பில் உள்ளது. அதனால், இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.