வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (18:44 IST)

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு புற்றுநோய்

Navjot Kaur Sidhu
முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்துவின் மனைவி கேன்சர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமிர்தசரஸ் முன்னாள்  காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான நவ்ஜோத் சித்து கடந்த 1988 ஆம் ஆண்டு  நட்ந்த ஒரு சாலை மறியல் வழக்கில், கடந்தாண்டு மே 20 ஆம் தேதி முதல் அவருக்கு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்போது, பாட்டியாலா சிறையில், சித்து தண்டனை பெற்று வருகிறார். அவர் விரையிலேயே நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு கட்சியினடையே எழுந்தது.

இந்த நிலையில்,   நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ’தனக்கு இரண்டாம் நிலை கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தன் கணவர் சித்து செய்யாத குற்றத்திற்கு சிறைத்தண்டனை பெற்று வருவதாகவும், இவ்வழக்கி தொடர்புடைய அனைவரையும் மன்னிக்க வேண்டுமென்றும் ’தெரிவித்துள்ளார்.