கோலி பேட்டிங் செய்ய அழகே அழகு… ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பாராட்டு!
இந்திய அணியின் கேப்டன் கோலியின் பேட்டிங்கைப் பற்றி ஆடம் ஸாம்பா புகழ்ந்து பேசியுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அதற்காக அணி வீரர்கள் அனைவரும் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறை ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா ஆர் சி பி அணிக்காக விளையாட உள்ளார். இவர் சர்வதேசப் போட்டிகளில் கோலியை சில முறை அவுட் ஆக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர் சிபி அணியில் இணைந்தது குறித்து ஸாம்பா ‘அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் ஸாம்பாவுடன் இணைந்து விளையாடுவது கற்றல் அனுபவமாக இருக்கும். எங்கள் அணியில் கோலி டிவில்லியர்ஸ் என உலகின் சிறந்த வீரர்கள் உள்ளனர்.அதிலும் குறிப்பாக விராட் கோலி பேட்டிங் செய்வது, பயிற்சி செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.’ எனக் கூறியுள்ளார்.