1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (11:27 IST)

சாதித்தது இந்திய அணி ! சரிந்தது ஆஸ்திரேலிய அணி !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் நம் இந்திய பவுலர்கள் அசத்தலாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணி வீரர்களைத் திணறடித்தனர். இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேயாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. 
 
ஏற்கனவே நடைபெற்ற இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்திய அணி 443/7 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் அறிவித்தது. இதனையடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 151 ரன்கள் எடுத்தன.
 
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 106/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் அறிவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு 399 ரன்கள் இலக்காக இருந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அணி நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.
 
இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய பவுலர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி  வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 261 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 
இந்திய பந்து வீச்சாளர் பும்ரா, ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
 
நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி நடக்கவுள்ளது.