நயன்தாராவை வருத்தப்பட வைத்த படக்குழு

VM| Last Updated: ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (15:27 IST)
தென்னிந்திய மொழி சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிற்கு, அடுத்தடுத்த படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. 
 
அதனால் நயன்தாரா படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஐரா என்ற படத்தில் நடித்து வருகிறார். சர்ஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். 
 
இந்த படத்தில் நயன்தாரா, சொன்ன நேரத்துக்கு முன்பாகவே படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுகிறார். இதனை கண்டு படக்குழுவினர் மிரண்டு போனார்களாம். ஆனால் நயன்தாரா நேரம் தவறாமல் வந்தாலும் இயக்குநர் காத்திருக்க வைத்து விடுகிறாராம்.  
 
ஏற்கனவே திட்டமிட்ட படி, இயக்குனர் காட்சிகளை எடுப்பதில்லையாம். இந்த வருத்தத்தை படக்குழுவினரிடம் நயன்தாரா சொன்ன பிறகு தற்போது நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்கூட்டியே படமாக்க இயக்குனர் தீவிர கவனம் செலுத்துகிறாராம். 


இதில் மேலும் படிக்கவும் :