வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (18:54 IST)

சீதக்காதி பட காட்சிகள் குறைப்பு! ..முழுவிவரம் இதோ !

சீதக்காதி திரைப்படம் மிகவும் நீளமாக இருந்ததால் படக்குழுவினர் படத்திலிருந்து 15 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் சீதக்காதி. சீதக்காதி விஜய் சேதுபதிக்கு 25 வது திரைப்படம். பழம்பெரும் நாடக நடிகரான அய்யாவை சினிமாவில் நடிக்க வைக்க பலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் பிடிவாதத்துடன்தான் சினிமாவில் நடிக்க முடியாது என்று அய்யா மறுத்துவிடுகிறார். 
 
இந்நிலையில் திடீரென அய்யா நாடகம் நடித்து கொண்டிருந்தபோதே இறந்துவிடுகிறார். ஆனால் இவர் இறந்த பின்னர் ஒருசில அதிசயங்கள் நடக்கின்றன, அந்த அதிசயத்தால் பல பிரச்சனைகளும் தீர்ந்துவிடுகின்றது. இதுதான் படத்தின் கதை. 
 
வழக்கமாக விஜய்சேதுபதி படம் என்றாலே அவரது தனித்துவமான நடிப்பு வெளிப்படும். ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் ஏமாற்றம். விஜய் சேதுபதி நன்றாக நடித்தும், முகத்தை மூடிய மேக்கப்பால் நடிப்பு வெளியே தெரியவில்லை. அதுபோக படம் நீளமாக இருப்பதால் போரடிக்கிறது.
 
இதனை மனதில் கொண்டு படக்குழுவினர் படத்திலிருந்து 15 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளனர். 2 மணிநேரம் 50 நிமிடங்களுக்கு மேல் செல்லும் இப்படத்தை குறைத்து 2 மணிநேரம் 35 நிமிடங்களுக்கு குறைத்துள்ளனர்.