கோஹ்லி, தோனி அதிரடி: இங்கிலாந்துக்கு 257 ரன்கள் இலக்கு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பதால் போட்டி விறுவிறுப்பாக உள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா இரண்டே ரன்களில் அவுட் ஆனாலும் தவான், விராத் கோஹ்லி, தோனி ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி 71 ரன்களும், தோனி 42 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.