செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (22:04 IST)

173 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்று உறுதி! எடுக்குமா கொல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 54வது போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
 
ஐதராபாத் அணியின் தவான் 50 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 36 ரன்களும், கோஸ்வாமி 35 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்
 
இந்த நிலையில் 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகிவிடும். தோல்வி அடைந்தால் பஞ்சாப் மற்றும் மும்பை அணியின் போட்டிகளின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்