2வது டி20 போட்டி: இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு: முதல் ஓவரில் கே.எல்.ராகுல் அவுட்!
2வது டி20 போட்டி: இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அபாரமாக விளையாடி 46 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணி முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது