1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (10:01 IST)

புதிதாக 24,882 பேருக்கு கொரோனா- இந்திய பாதிப்பு நிலவரம்!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.   
 
ஆனால் கடந்த சில நாட்களாக 20,000-த்திற்கு குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,882 பேருக்கு  பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,33,728 ஆக உயர்ந்தது.
 
மேலும் கொரோனாவால் புதிதாக 140 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,446 ஆக உயர்ந்தது. அதோடு, தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,957 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,73,260 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,02,022 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.