உள்ளாட்சித் தேர்தல்… ஏலம் விடப்பட்ட தலைவர் பதவி – கொலையில் முடிந்த விபரீதம் !
விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான சீட் ஏலம் விடப்பட்டதை எதிர்த்துக் கேள்விகேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் அதிமுக பிரமுகரை போட்டியின்றி தேர்வு செய்வதாக முடிவெடுத்துள்ளனர். இதை அதேப் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்ற சதீஷ்குமாரை ஒரு சிலர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார், சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. வழக்குப் பதிவு செய்த ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர், அதிமுகவைச் சேர்ந் ராமசுப்பு மற்றும் சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் ஆகிய 4 பேர் கைது செய்துள்ளனர்.