கட்டாயமாக ஓரினச்சேர்க்கை… மறுத்த சிறுவனைக் கொலை செய்த கும்பல் – திருச்சியில் நடந்த கொடூரம் !

Last Modified புதன், 11 டிசம்பர் 2019 (08:59 IST)
திருச்சிக்கு அருகேயுள்ள அரியமங்கலத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த  12 வயது சிறுவன் அப்துல் வாகித். இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி முதல் இவரைக் காணவில்லை. இந்நிலையில் அதுபற்றி அவரது பெற்றோர் புகாரளிக்க போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல் போன சிறுவன் பிரபல சேகர் என்பவரின் மகன் இளவரசன் மற்றும் அவரது நண்பர்களோடு சுற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இளவரசன் (18), சரவணன் (19), லோகேஷ் (16), வீராசாமி (16) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன. ’அரியமங்கலம் பகுதியில் நிறைய பன்றிப் பண்ணைகள் உள்ளன. அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தாங்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோம் .கடந்த 3 ஆம் தேதியன்றுவாகித்தையு அங்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்த முயன்றோம். . ஆனால் அதற்கு அவன் ஒத்துக் கொலை செய்தோம். அதன் பின் சடலத்தை அருகிலுள்ள குப்பைக் கிட்டங்கியில் புதைத்தோம்.’ எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து போலிஸார் அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதில் மேலும் படிக்கவும் :