வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (09:52 IST)

சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறிய நபர்… துர்நாற்றம் – விசாரணையில் திடுக் தகவல் !

மும்பையில் ஆட்டோ ஒன்றில் ஏறிய மர்மநபர் வைத்திருந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வந்ததை பற்றி கேட்டதை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் ஆட்டோ ஒன்றில் ஒரு நபர் சூட்கேஸோடு ஏறியுள்ளார். பாதி வழியில் அந்த பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீச அதுபற்றி கேட்டுள்ளார். அதனால் பதற்றமடைந்த அவர் பெட்டியை பாதி வழியிலேயே தூக்கி எறிந்துவிட்டு ஆட்டோவில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் போலிஸில் புகாரளிக்க அதுபற்றி விசாரணை நடந்தது.

அந்த சூட்கேஸைப் போலிஸார் கண்டுபிடித்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக நறுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த நபரைத் தேடிய போலீஸார் அவரைக் கைது செய்து கண்டுபிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் அரவிந்த் திவாரி என்றும் கொலை செய்யப்பட்டது அவரது மகள் பிரின்ஸி என்பதும் தெரியவந்துள்ளது.

மும்பையில் தன் மூத்த மகள் பிரின்ஸியுடன் வசித்து வந்துள்ளனர். பிரின்ஸி தன்னுடன் பணிபுரிந்து வந்த ஒருவரைக் காதலிக்க அதற்கு திவாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரின்ஸி தனது காதலைத் தொடர கோபத்தில் அவரைக் கொலை செய்துள்ளார் திவாரி. பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அதை ஒரு சூட்கேஸில் பார்சலாகக் கட்டி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீச ஆட்டோ ஓட்டுனர் அதுபற்றிக் கேட்க, பார்சலை பாதி வழியிலேயே தூக்கி எறிந்துவிட்டு அவர் தப்பித்துள்ளார்.அப்போதுதான் ஆட்டோ ஓட்டுனரால் சிக்கியுள்ளார்.