செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (08:43 IST)

சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி தகவல்..!

சென்னை புழல் சிறையில் நகை திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த மீனாட்சி என்கிற காந்திமதி என்ற 50 வயது பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மீனாட்சி என்கிற காந்திமதி என்ற கைதிக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திர எழுதி தர வராததால், மனமுடைந்து தற்கொலை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயர்புரத்தில் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டார் என்பதும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் பெண் கைதி தூக்கில் தொங்கி சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva