செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (09:33 IST)

ஒரு தடவ பாக்கலாம்.. கைதி, விக்ரம் அளவு இல்ல..? – கேரள ரசிகர்களின் லியோ விமர்சனம்!

leo vijay
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் கேரளாவில் அதிகாலை காட்சியே வெளியான நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் லியோ. இந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் காட்சியே 9 மணிக்கு ரிலீஸ் ஆன நிலையில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை 5:00 மணி காட்சியே ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு பிறகு விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ள மாநிலம் கேரளா.

இந்நிலையில் கேரளாவில் லியோ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் ஷோ பார்த்த மலையாள ரசிகர்கள் படம் வேற லெவலில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். மலையாள விஜய் ரசிகர்களை தாண்டி பொதுவாக வந்து பார்த்த ஆடியன்ஸ்க்கு இந்த படம் ஓரளவு பிடித்துள்ளது. படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளதாகவும் விஜய் நடிப்பும் நன்றாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் படம் முழுவதும் இடம்பெறும் புகைப்பிடிக்கும் காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் சார்ந்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டாம் பாதி இழுவையாக செல்வதாகவும், ஆக்ஷன் காட்சிகள் மட்டும் சிறப்பாக உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் லோகேஷின் முந்தைய படங்களான கைதி விக்ரம் போன்ற படங்களுடன் ஒப்பிட்டால் லியோ குறைவுதான் என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K