வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (14:46 IST)

செல்போனில் பேசியபடி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் !

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே  ரயில் பாதையை கடக்க முயன்ற போது,  அவ்வழியே வந்த ரயில் மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
விழுப்புரம் மாவட்டம் நெற்குணம் பகுதியில் வசித்து வந்தவர் ஜான்சிராணி. இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 
 
இப்படியிருக்க, இன்று காலை வழக்கம் போல வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து சென்றார் ஜான்சிராணி. கம்பெனிக்கு போகும் வழியில் உள்ள சென்னை - திருச்சி ரயில் பாதையில் அவர் செல்போனில் பேசிக்கொண்டே சென்றதாகத் தெரிகிறது. அந்த நேரம் அவ்வழியே வந்த திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஜான்சிராணி மீது மோதித்தள்ளியது. இந்த கோர சம்பவத்தில் ஜான்சிராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். திருமணமாக இருந்த பெண், ரயிலில் பலியான சம்பவம், அவரது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுகுறித்து செங்கல்பட்டு இருப்புப் பாதை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.