திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (11:20 IST)

14 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊருக்கு இருக்கானு பாத்துக்கோங்க...

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மழை குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவல் பின்வருமாறு, வளிமண்ல மேலடுக்கு சுழற்றி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். 
 
வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,கோவை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
 
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு வேளைகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்ககடல் சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.