திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (12:00 IST)

சனிக்கிழமை லீவ் கிடைக்குமா?

பண்டிகை காலம் என்பதால் வரும் 16 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க கோரிக்கை. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களும் விடுமுறை ஆகிவிடுவதால் இதனை தொடர்ந்து வரும் சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கும் படி கோரப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் வரும் 16 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
 
பள்ளிக்கல்வித்துறை இதனை பரிசீலிக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.