பள்ளிகள் மூடப்படுமா?
இந்தியாவில் கொரொனா அலை பரவத் தொடங்கியது முதல் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டன.
சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தமிழகம், டெல்லி, கர்நாடகம், உள்ளிட்ட மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதாக அறிவித்தது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுக்கு கொரொனா தொற்றுக் கண்டறியப்பட்ட நிலையில், இதுகுறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 25 மாணவர்கள், மற்றும் 10 ஆசிரியர்கள் என மொத்தம் 35 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.