''டாஸ்மாக்''கடைகள் மூடாமல் விட்டிருப்பது ஏன் - தினகரன் கேள்வி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டாஸ்மாக் கடைகள் மூடாமல் விட்டிருப்பது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கொரொனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டாஸ்மாக் கடைகள் மூடாமல் விட்டிருப்பது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தொடங்கியுள்ளதால் பல்வேறு புதிய கட்டுப்படுகளை முதலமைச்சர் ஸ்டாலின் விதித்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்