டாஸ்மாக் கடைகள் இயங்காது - டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக் கடைகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊடரங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைப்பரவலைக் குறைக்க தமிழக அரசு புதிய ஜூன் 7 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 1 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஊரடங்கு செயல்பாடுகளே தொடரும் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் அனைத்துப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதா என்பதை அங்குள்ள மண்டல மேலாளர்கள் உறுதி செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.