புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (18:50 IST)

டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி !

டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி !
கொரொனா  பாதிப்பு குறைவாக உள்ள சுமார் 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா இரண்டாம் அலையின் தொற்றுக் குறைந்து வருகிறது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொற்றுப் பரவல் அதிகம் உள்ளதாக கூறப்படும் 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரொனா  பாதிப்பு குறைவாக உள்ள சுமார் 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் கொரொனா பாதிப்புக் குறைவாக உள்ள 27 மாவட்டங்களிஉம் அழகு நிலையங்கள், சலூன்கள், உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.