திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (18:00 IST)

வரும் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? ரஜினியின் அண்ணன் பதில்

Rajinis brother
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினியின் அண்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று விழுப்புரத்தில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அவர்கள் பணியாற்றினார். உலகமே புகழும்படி  வேலையைச் செய்துள்ளனர். எனவே ரஜினியின் அனுமதியுடன் வீரமுத்துவேலின் பெற்றோரை அவர்களது வீட்டில் நேரில் சென்று பெற்றோரை பார்த்தேன். அவரது பெற்றோர்  நீடுழி வாழ வேண்டும்…அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.. அந்த மாதிரி புத்திரரன் இவர்களுக்கு கிடைத்துள்ளார். இன்னும் சந்திரனுக்கு போக ஏற்பாடுகள் செய்யட்டும்….''என்றார்.

ஜெயிலர் படம் பற்றிய செய்தியாளார்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘’ஜெயிலர் படம் வித்தியாசமாக உள்ளது. திரும்ப திரும்ப அப்படத்தைப் பார்த்து வருகின்றனர். இன்னும் நிறைய வெற்றிப் படம் கொடுக்க வேண்டும்.'' என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘’வரும் நாடாளுமன்ற  தேர்தலில்  யாருக்கும் ரஜியின் ஆதரவு இல்லை. இனிமேலும் இல்லை’’ என்று அவர்  தெரிவித்துள்ளார்.