வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (17:51 IST)

இந்தியாவின் முன்னேற்றம் உலகளவில் நமது வலிமையின் அடையாளம் - பிரதமர் மோடி

PM Modi
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3   எனும் விண்கலத்தை  சமீபத்தில் ஸ்ரீகரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு  அனுப்பிய நிலையில்,   விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக  நிலவில் தரையிறங்கியது.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதியை  இனி 'தேசிய விண்வெளி தினமாகக்' கொண்டாடுவதற்கு மத்திய அரமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

சந்திரயான் 3 விண்கலம் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்ற பெயரிடப்பட்டதற்கும் மத்திய பாஜக அமைச்சரவை வரவேற்றுள்ளது.

இதுகுறித்து, பிரதமர் மோடி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகிழ்ச்சியில் மத்திய அமைச்சரவையும் ஈடுபட்டுள்ளது.    நமது விஞ்ஞானிகளின் (இஸ்ரோ) சாதனையை அமைச்சரவை பாராட்டுகிறது… இது விண்வெளி அமைப்பில் வெற்றிமட்டுமல்ல…. இந்தியாவின் முன்னேற்றம்  உலகளவில் நமது வலிமையின் அடையாளமாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அனுசரிக்கப்படுவதை மத்திய அமைச்சரவை வரவேற்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.