திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (08:23 IST)

ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Pragyan Rover
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய நிலையில் இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். 
 
அதன்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாட, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சந்திரயான் - 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதில், பெண் விஞ்ஞானிகள் பெருமளவில் பங்காற்றியதற்கு பாராட்டு தெரிவித்த அமைச்சரவை கூட்டம், இது அடுத்த தலைமுறை பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
 
மேலும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் திட்டத்தால் தான் இந்திய விண்வெளி வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
Edited by Siva